
இந்தோனேசியாவில் இருந்தபோது, ‘கெஹெல்பத்தர’ பத்மே உட்பட, தேடப்படும் இலங்கை பாதாள உலகக் குற்றவாளிகளுடன் பலருடன் கைது செய்யப்பட்ட பெண்ணும் குழந்தையும் இன்று மாலை (29) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை 5.50 மணியளவில் அவர்கள் நாட்டிற்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட பிரபல குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் மண்டினு பத்மசிறி மற்றும் ‘கொமாண்டோ சாலிந்த’, ‘பேக்கோ சமன்’, ‘தெம்பிலி லஹிரு’ மற்றும் குடு நிலந்த ஆகிய பெயர்களால் அறியப்படும்- குற்றக் கும்பல் உறுப்பினர்கள், ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, அவர்களுடன் இருந்த ஒரு பெண்ணும் குழந்தையும் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எவையும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலங்கையிலிருந்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் – மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, மேற்படி நபர்கள் இந்தோனேசியாவில் வைத்து கைதாகினர்.


