தலைப்புச் செய்திகள்

ரணில் கைதுக்கு எந்த ராஜதந்திரியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை: வெளிவிவகார அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு ராஜதந்திரியோ அல்லது ராஜதந்திர அமைப்போ – எந்த ஆட்சேபனையினையும் தெரிவிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் விஜித ஹேரத்; இந்த விஷயத்தில் பல்வேறு நபர்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், அவை பொருத்தமற்றவை என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் சட்டம் சமமாகவும் நியாயமாகவும் அமுல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது கவனித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்று முன்னர் கூறப்பட்டாலும், தற்போதைய சூழலில் அத்தகைய நிலைமை இப்போது இருப்தாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.