
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பாணையைப் பெறுவதற்கு ஒரு நாள் முன்பு, கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டலில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர் சஷி தரூரை சந்தித்ததாக, அருண செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் நீதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி கலந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சரான சஷி தரூர் – காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபராகக் கருதப்படுகிறார். எதிர்வரும் இந்திய பொதுத் தேர்தலில் – ராகுல் காந்திக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்க தூதுவர்கள் குழுவொன்று இம்மாதம் 28ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது, இருப்பினும் அவர்கள் யார் என்பதும், சந்திப்பின் நோக்கமும் வெளியிடப்படவில்லை.



