
முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக – டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு – இன்று (21) கொழும்பு பிரதம நீதவான் தனுஜ லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




