தலைப்புச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து கைது

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் போராட்டம் தொடர்பான வழக்கில் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் தேசபந்து தென்னகோன் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தேசபந்துவின் கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்தது