
அயோடின் கலந்த உப்பு விலையை குறைப்பதாக, லங்கா உப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது – அந்த நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக இதனைக் கூறினார்.
இதன்படி, 400 கிராம் அயோடின் கலந்த தூள் உப்பு பக்கெட்டின் விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 01 கிலோகிராம் பக்கெட்டின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த வாரம் முதல், 400 கிராம் தூள் உப்பு பக்கெட் 100 ரூபாய்க்கும், 01 கிலோகிராம் தூள் உப்பு பக்கெட் 200 ரூபாய்க்கும், 01 கிலோகிராம் கல் உப்பு பக்கெட் ரூ. 150க்கும் விற்கப்படும்.

இதேவேளை, நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 400 கிராம் கல் உப்பு பக்கெட் சதோச விற்பனை நிலையங்களிலும் ரூ. 90க்குக் கிடைக்கும் என்றும் நிறுவன தலைவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக – இவ்வாறு விலையைக் குறைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


