
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த முன்பிணை மனுவை – கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பிணை மனுவை இன்று (20) காலை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர பரிசீலித்தார்.
அதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுடைய கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.
தொடர்பான செய்தி: தேசபந்து தொடர்பான கடிதத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்


