தலைப்புச் செய்திகள்

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் காஸாவில் பலி

ஸ்ரேலிய தாக்குதல்களால் 2023 ஒக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட 62,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களில், 18,885 சிறுவர்களும் அடங்குவர் என, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று (19) செவ்வாய்க்கிழமை காஸா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில், உணவு உதவி கோரிச் சென்ற 07 பேர் உட்பட 50 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

காஸா மீது இஸ்ரேலில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 62,064 பேர் கொல்லப்பட்டனர், 156,573 பேர் காயமடைந்தனர்.