
இலங்கைத் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு வேலைக்கு அமர்த்துவதற்கு தாய்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
”30,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். ஆரம்ப கட்டத்தில் 10,000 பேர் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். புதிய கொள்கையின் கீழ் நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று, தாய்லாந்து தொழில் அமைச்சர் பொங்கவின் ஜங்ருங்ருங்கிட் கூறியுள்ளார்.
கடந்த மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதலில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டு 300,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் போர்நிறுத்தம் மேற்கொண்டுள்ள போதும், ஆயிரக்கணக்கான கம்போடிய தொழிலாளர்கள் – தாய்லாந்திலிருந்து நாடு திரும்பியதால், தாய்லாந்தில் தொழிலாளர் நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஏற்கனவே தாய்லாந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



