
– தில்சாத் பர்வீஸ் –
கஞ்சா விற்பனை செய்த மற்றும் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை – சம்மாந்துறை பொலிஸார் நேற்று (18) இரவு கைது செய்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் இவர்கள் கைதானார்கள்.
கல்லரிச்சல் 01 பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், தனமலவில பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், புளக் ஜே மேற்கு 02 பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 350 கிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1400 மில்லிகிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1000 மில்லிகிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டன.
குறித்த கைது நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



