தலைப்புச் செய்திகள்

05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவைகள் வாய்க்காலில் இருந்து மீட்பு

ரி56 துப்பாக்கிக்கான பெருமளவு ரவைகளை – கெடலாவ (Getalawa) பிரதேச வாய்க்காலில் இருந்து கலென்பிந்துனுவெவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ரி56 துப்பாக்கிக்கான 5,038 ரவைகள் அடங்கிய பொதி, வாய்க்காலில் புதைக்கப்பட்டுள்ளது. ஆயினும், தற்போதைய வறண்ட காலநிலை காரணமாக நீர் வரண்டதை அடுத்து, புதைக்கப்பட்ட பொதி வெளித் தெரிந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனுடன் தொடர்பானவர்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.