தலைப்புச் செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த நடவடிக்கை இடைநிறுத்தம்

ரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) – இன்று (11) தொடங்கவிருந்த நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

சுகாதார அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைத்ததாகக் கூறி, இந்த முடிவை அந்தச் சங்கம் எடுத்துள்ளது.

முக்கிய விடயங்கள் குறித்த ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, குறிப்பாக வைத்தியர்களின் இடமாற்ற செயல்முறை தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து – வேலை நிறுத்தத்தை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு எதிர்கால நடவடிக்கையையும் தீர்மானிப்பதற்கு முன், இந்த உறுதிமொழிகளின் முன்னேற்றம் – உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.