தலைப்புச் செய்திகள்

தெற்காசிய பணக்காரர்களின் பட்டியல் வெளியானது: இலங்கையரும் இடம் பிடித்துள்ளார்

2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை ‘கல்ஃப் நியூஸ்’ வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானி – முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு 118 பில்லியன் (இலங்கை மதிப்பில் சுமார் 35 லட்சத்து 45 ஆயிரத்து 863 கோடி ரூபாய்) அமெரிக்க டொலர்களாகும்.

‘கல்ஃப் நியூஸ்’ வெளியிட்டுள்ள பட்டியலின் படி, இரண்டாமிடத்தில் பாகிஸ்தானின் ஷாஹித் கான் (13.5 பில்லியன் அமெரிக்க டொலர்) உள்ளார்.

அடுத்த இடங்களில், பங்களாதேஷ் நாட்டின் மோசா பின் ஷம்ஷர் (12 பில்லியன் அமெரிக்க டொலர்கள்), நேபாளத்தின் பினோத் சவுத்ரி (1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) மற்றும் இலங்கையின் இஷாரா நாணயகார (1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்).

இலங்கையின் இஷார நாணகார – தனியார் நிதி நிறுவனமான LOLC நிறுவனத்தின் உரிமையாளராவார்.

அம்பானியின் சொத்து மதிப்பு மற்ற தெற்காசிய அதிபர்களின் சொத்து மதிப்பு, அந்தப் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளவரின் சொத்து மதிப்பை விடவும் 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.