தலைப்புச் செய்திகள்

நெதன்யாகுவின் கோரிக்கைக்கு, ஹமாஸ் நிபந்தனை விதிப்பு

ஹமாஸ் – தங்களிடம் இருக்கும் இஸ்ரேலிய பணயக் கைதிகளின் நிலை தொடர்பில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், அவர்களுக்கு வைத்திய உதவிகளை உடனே வழங்குமாறு – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், பணயக் கைதிகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்றால், காஸாவில் அனைவருக்கும் உதவிகள் கிடைக்கும் வகையில் மூடப்பட்ட பகுதிகள் அனைத்தையும் திறப்பதற்கு, இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.

இந்நிலையில், ராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு பணயக் கைதிகளை விடுவிப்பதில், நெதன்யாகு உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது இவ்வாயிருக்க, இஸ்ரேலையும் பணக் கைதிகளையும் நெதன்யாகு பேரழிவுக்கு இட்டுச் செல்வதாகவும், ராணுவ நடவடிக்கை மூலம் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சி ஒரு மோசடி என்றும் பணயக் கைதிகளின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு தெரிவித்துள்ளது.

பட்டினியால் உடல் மெலிந்துள்ள பணயக் கைதிகளின் வீடியோவை அண்மையில் ஹமாஸ் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் குழியொன்றை தோண்டும் பணயக் கைதியொருவர், தனது உடலைப் புதைப்பதற்கான குழியை தானே தோண்டுவதாகத் தெரிவித்திருந்தார்.