
தனியார் பஸ் ஒன்றும் – போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் இன்று (21) அதிகாலை, கேகாலை – கலிகமுவ பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில், 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலையில் இருந்து ரத்னபுரிக்கு பயணித்த ஒரு தனியார் பஸ்ஸும், வெரகொடயிலிருந்து கேகாலை வரை பயணித்த போக்குவரத்து சபை பஸ்ஸும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த சம்பவம் அதிகாலை 5.00 மணியளவில் நடந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இரண்டு பஸ்களிலிருந்த 21 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



