தலைப்புச் செய்திகள்

ஷானியை சிஐடி பணிப்பாளராக நியமிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் கோரவில்லை

ஷானி அபேசேகரவை – குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளராகவோ, அல்லது ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவோ நியமிக்குமாறு – கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் குறிப்பாகக் கோரவில்லை என்று தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்தா இன்று (20) தெரிவித்தார்.

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாள்பவர்களை மாற்றவும், அவர்களை மீண்டும் அவர்களின் அசல் பதவிகளில் அமர்த்தவும் மட்டுமே கார்டினல் ரஞ்சித் விரும்பினார்” என்றும் அருட்தந்தை ஜூட் ஊடகங்களுக்கு கூறினார்.

ஷானி அபேசேகர போன்ற அதிகாரிகள் மீது – சில குற்றச்சாட்டுகள் இருப்பதை கத்தோலிக்கத் திருச்சபை புரிந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.