
போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமைக்காக மொரட்டுவ பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ – ரவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர், நேற்று மாலை (14) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பத்து 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, அவரின் வீட்டை சோதனை செய்த பொலிஸார், போலி நாணயத்தாள்களை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஓர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தனர்.
மேலும் 25 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள், எட்டு போலி 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் மற்றும் இரண்டு போலி 20 ரூபாய் நாணயத்தாள்களையும் அங்கு கைப்பற்றியுள்ளனர்.



