
காஸாவில் தற்காலிக 60 நாள் போர் நிறுத்தத்துக்கான சமீபத்திய திட்டம் குறித்து ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும் அதன் பதில் மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள இந்தப் போர் நிறுத்த திட்டத்துக்கு – இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆனாலும் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் என்கிற நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. மேலும், அந்தப் போர் நிறுத்தம் என்னவாக இருக்கும் என்பது குறித்து நிறைய பேச்சுக்களும் உள்ளன. இதில் இஸ்ரேலிய நிபந்தனைகள் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன என, அல் ஜெசீரா தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அகற்றப்பட்டு, அதன் ஆயுதங்களை கைவிட்டு, எஞ்சியிருக்கும் தலைவர்களை நாடு கடத்தினால் மட்டுமே – போர் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என, இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
ஆயினும் இது தொடர்பில் ஹமாஸ் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் அதன் ஆயுதங்களை ஒப்படைக்கும் யோசனை பற்றி, அந்த இயக்கம் பேசவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஹமாஸ் ஒரு நேர்மறையான அறிவிப்பை வெளியிடுமா என்பதைப் பார்க்க நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். அது நடந்தால், செயல்படுத்துவது குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். இது உடனடி விஷயமாக இருக்கப் போகிறது என்ற எண்ணம் முற்றிலும் துல்லியமாக இருக்காது. ஏனென்றால் மேசையில் இருப்பது ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்கான கட்டமைப்பாகும். ஒரு விரிவான திட்டம் அல்ல என்று, அல் ஜெசீராவின் ஊடகவியலாளர் நூர் ஒடே தெரிவித்துள்ளார்.



