தலைப்புச் செய்திகள்

வீதியோர மரத்தில் மோதி பஸ் விபத்து: 21 பயணிகள், சாரதி படுகாயம்

இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று, சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில், தெதுருஓயாவில் – வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதியதில், 21 பயணிகள் மற்றும் சாரதி படுகாயமடைந்துள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் – இவ்வாறு விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த வின்னர் சாரதியை பிரதேசவாசிகள் மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். இந்த விபத்தின் காரணமாக சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் போக்குவரத்து நெருசல் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.