
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே இன்று (30) காலமானார். அவருக்கு 82 வயது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும், பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராகவும் காமினி லொக்குகே இருந்தார்.
இவர் சுற்றுலாத்துறை,விளையாட்டு, எரிசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்தார்.
பிலியந்தல பிரதேசத்தில் பிறந்த காமினி லொக்குகே, 1960ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார்.
கெஸ்பேவ தேர்தல் தொகுதியில் 1983ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, அவர் முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.



