தலைப்புச் செய்திகள்

கட்டாரிலுள்ள அமெரிக்க ராணுவத்தளம் மீது, ஈரான் நடத்திய தாக்குதலுக்கு சஊதி கண்டனம்

கட்டாரிலுள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது – ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதனை சஊதி அரேபியா கண்டித்துள்ளது.

சர்வதேச சட்டம் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் செயல் எனவும் – ஈரானின் தாக்குதலை – அறிக்கையொன்றின் ஊடாக சஊதி விமர்சித்துள்ளது.

‘சகோதர நாடான கட்டாருக்கு எதிராக, ஈரான் தொடுத்துள்ள தாக்குதலை சஊதி அரேபியா கடுமையாகக் கண்டிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது’ எனவும் சஊதி தெரிவித்துள்ளது.

சகோதர நாடான கட்டாருக்கு தனது ஒற்றுமையையும் – முழு ஆதரவையும் சஊதி அரேபியா உறுதிப்படுத்துவதாகவும் அந்த நாடு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கட்டார் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் சகோதர நாடான கட்டாரை ஆதரிக்க அதன் அனைத்து திறன்களையும் சஊதி பயன்படுத்தும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்பான செய்தி: கட்டார், ஈரான், குவைத், பஹ்ரைன் நாடுகளிலுள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்