
ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் கைதியொருவரை சட்டவிரோதமாக விடுவித்தமை தொடர்பில் – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) சிறைச்சாலை அத்தியட்சகரை தலா 500,000 ரூபபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்தது.
வழக்கு மீண்டும் ஓகஸ்ட் 04, 2025 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் ஜூன் 08 அன்று சிஐடி-யினரால் கைது செய்யப்பட்டார்.
வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் – மன்னிப்பு கிடைக்காத கைதியொருவரை விடுவித்ததற்காக, அனுராதபுரம் சிலைச்சாலை அத்தியட்சகர் கைது செய்யப்பட்டார்.
இதையும் காணுங்கள்



