
இஸ்ரேலில் இருந்து தனது நாட்டு குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளை பிரான்ஸ் மேற்கொண்டுள்ளது. சுமார் 250,000 பிரெஞ்சு நாட்டு மக்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர்.
இதற்காக பிரான்ஸ் ஒரு ராணுவ A400M விமானத்தை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக, அந்த நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இயக்கப்படும் பொதுமக்கள் போக்குவரத்து விமானங்களுக்கு மேலதிகமாக, இந்த ராணுவ விமானம் அனுப்பப்படுவதாக – மேற்படி அமைச்சுக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ராணுவ விமானங்கள் மூலம் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் சைப்ரஸுக்கு கொண்டு வரப்பரப்படவுள்ளனர்.



