
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்களில் 2,433 வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.
தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், வருமானம் மற்றும் செலவு விபரங்களை மொத்தமாக 78,725 வேட்பாளர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.
இதில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில், 76,292 பேர் தங்கள் அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இருப்பினும், 2,433 வேட்பாளர்கள் உரிய திகதிக்குள், தங்கள் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



