தலைப்புச் செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ரே கலி பல்தசார் தெரிவானார்

தேசிய மக்கள் சக்தியின் வ்ரே கலி பல்தசார் (Vraie Cally Balthazaar) கொழும்பு மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில், 61 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பல்தசார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ரிசா சாரூக்கும் மேயர் பதவிக்கு போட்டியிட்டார்.

மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும் பெற்றன.

கொழும்பு மாநகர சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் வ்ரே காலி பால்தசார், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்ய இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்கோள் விடுத்துள்ளார்.