
சிறைத்தண்டனை அனுபவித்த வரும் மன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெனாண்டோ ஆகியோரை, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹிந்தானந்தவக்க 20 வருடங்களும், நளின் பெனாண்டோவுக்கு 25 வருடங்களும் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து கைதிகளுக்கும் பொருந்தும் விதியாகும் என, சிறைச்சாலை ஆணையாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கைதிகளைச் சந்திப்பதற்க வழக்கமாக ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவம் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் இருவரும் ஒரே பொதுவான பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் இன்று (02) சிறைச்சாலைப் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தொடர்பான செய்தி: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு 20 வருடம் சிறைத்தண்டனை



