
பாதாள உலகக் கும்பல் தலைவன் ‘கெஹல்பத்தர பத்மே’ எனப்படும் மண்டினு பத்மசிறி எனனும் நபருக்க – மூன்று போலிக் கடவச்சீட்டுக்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவரை, இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (27) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) அவரை இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
தற்போது துபாயில் தலைமறைவாக இருக்கும் ‘கெஹல்பத்தர பத்மே’ என்வர், ‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் ஒரு சந்தேக நபராவார்.



