
கொகரெல்ல (Gokarella) பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (24) நடந்த ஒரு சம்பவம் தொடர்பில் இவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொன்ஸ்டபில் – தனிநபர் ஒருவரைத் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியொ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.
கொகரெல்லவில் உள்ள இப்பாகமுவ – மடகல்ல வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் மற்றும் ஒரு பெண்ணை பொலிஸார் விசாரித்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
குருநாகல் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணையைத் தொடங்கியதையடுத்து, கொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை குருநாகல் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நடத்தி வருகிறார்.



