
நாட்டிலிருந்து 2025ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளனர் என – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில், சுய பதிவு மூலம் வெளிநாடு சென்றோர் 64,150 பேர் ஆவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவுசெய்தவர்கள் 36,263 பேர். இந்தக் குழுவில் 39,496 பெண்களும் 60,917 ஆண்களும் அடங்குவர்.
இவர்களில் குவைத் நாட்டுக்கே அதிகமானோர் சென்றுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 25,672 எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 18,474 பதிவுசெய்யப்பட்ட நபர்கள் ஐக்கிய அரபு ராஜியத்துக்கும், 14,162 பேர் கட்டாருக்கும்,12,625 பேர் சஊதி அரேபியாவிற்கும் சென்றனர்.
இந்த ஆண்டு 340,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்ப்பதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.



