தலைப்புச் செய்திகள்

கொத்மலை பஸ் விபத்து தொடர்பில் ஆராய குழு நியமனம்

நாட்டில் மிகப்பெரும் துயரத்தை ஏற்பத்தும் வகையில், 22 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்த கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் நடந்த பஸ் விபத்து குறித்து விசாரிப்பதற்கு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய – ஒரு விசேட குழுவை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தலைமை வகிக்கின்றார். மேலும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவில் இடம்பெறுவார்கள். விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை, நடந்த விபத்துக்கு குறித்து பல முக்கிய விடயங்களை ஆராயும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றயை கட்டுப்படுத்தும் விதமாக – இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: கொத்மலை பஸ் விபத்து: சிகிச்சை பெறுவோரையும் குடும்பத்தினரையும் பிரதமர் சந்தித்தார்