தலைப்புச் செய்திகள்

வெப்பம் நாளை இன்னும் அதிகரிக்கும்: 04 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Men with heat stroke.

அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு, இன்றும் நாளையும் பல பகுதிகளில் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க சாத்தியமுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“வெப்பக் குறியீட்டு முன்னறிவிப்பு – ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. மேலும் இது உங்கள் உடலில் உணரப்படும் நிலை” எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெயிலில் நீண்ட நேரம் காணப்படுவதும், வெளிப்புற செயல்பாடுகளும் – சோர்வுக்கு வழிவகுக்கும் என்றும், தொடர்ந்து அவ்வாறு இருந்தால், அது வெப்பப் வலிப்பை என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, மக்கள் நீரை அருந்துமாறும், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.