தலைப்புச் செய்திகள்

வியட்நாமிலிருந்து நாடு திரும்பியவுடன் வாக்களித்தார் ஜனாதிபதி

வியட்நாம் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாகப் பயணித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (06) நாடு திரும்பிய சிறிது நேரத்திலேயே தேர்தலில் வாக்களித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாம் நாட்டுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக, 03ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டார்.

இந்த நிலையில், வியட்நாம் நாட்டில் நடைபெறும் – ஐக்கிய நாடுகளின் 20ஆவது வெசாக் தின கொண்டாட்டங்களில், இன்று காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இதனையடுத்து அவர் தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்து இன்று நாடு திரும்பியிருந்தார்.