
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பகிடிவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைகளில், மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 29 அன்று சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
விசாரணைகளைத் தொடர்ந்து, தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருவர் – இன்று (06) காலை கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடு தொடர்பாக இதுவரை 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவரை சம்பவத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரின் மரணம் தொடர்பாக சானலவெவ பொலிஸ் நிலையத்தில் – சக மாணவர் ஒருவர் முறைப்பாடு அளித்ததை அடுத்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.



