தலைப்புச் செய்திகள்

நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம், மற்றொருவர் காயம்

மீட்டியாகொட – தம்பஹிட்டிய பகுதியில் நேற்று (03) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார். சம்பவத்தில் 52 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள், ரி56 துப்பாக்கியைப் பயன்படுத்தி உணவகமொன்றுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.