
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக – தேர்தல் சட்டங்களை மீறியமைக்காக, இதுவரை மொத்தம் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 03ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6:00 மணி வரை இந்தக் கைதுகள் நடந்துள்ளன.
வேட்பாளர்களைத் தவிர, 131 அரசியல் கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் அதே காலப் பகுதியில், 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான 313 முறைப்பாடுகளும், குற்றச் செயல்கள் தொடர்பான 85 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



