தலைப்புச் செய்திகள்

71 ஆயிரம் பேர் போட்டியிடும் தேர்தல் களத்தில், 200 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன: அமைதி நிலவுவதாக பஃப்ரல் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இதுவரை பெரும்பாலும் அமைதியாக நடைபெற்று வருவதாக பஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 71,000 பேர் போட்டியிட்ட போதிலும், தேர்தல் தொடர்பான 200 முறைப்பாடுகள் மட்டுமே பொலிஸாரிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பஃப்ரல் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

தெரணியகலாவில் நேற்று (14) நடந்த ஒரு சம்பவம் உட்பட, இதுவரை சுமார் 13 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் மொத்தம் 15 வேட்பாளர்கள் மற்றும் 52 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.