
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான நாடாளுமன்ற அனுமதி பெறப்படவுள்ளது.
எதிர்வரும் 08 ஆம் திகதி இதற்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு முடிவு செய்துள்ளது என்று, நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவுதெரிவித்துள்ளது.
சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏப்ரல் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



