தலைப்புச் செய்திகள்

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள், வரலாற்றில் முதல் தடவையாக ஏற்றுமதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் – வரலாற்றில் முதன்முறையாக நேற்று (29) ஏற்றுமதி செய்யப்பட்டன.

மதுரங்குளியில் உள்ள ‘ஓஷன் ஃபுட்’ தொழிற்சாலை வளாகத்தில் உத்தியோகபூர்வமாக டின் மீன்களின் முதல் தொகுதியை ஏற்றுமதி செய்யும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல் வள அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்த டின் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.