தலைப்புச் செய்திகள்

மியன்மார் நில அதிர்வில் 10 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என அச்சம்

மியான்மார் நாட்டில் நேற்று (28) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் இறந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அச்சம் தெரிவித்துள்ளது.

ஆயினும் இதுவரை 1002 பேர் உயிரிழந்ததாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரின் – மாண்டலே நகரில் மட்டும் 694 பேர் உயிரிழந்துவிட்டதாக ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டதால் மியான்மரின் நகரங்கள் பலவும் இருளில் மூழ்கியுள்ளன.

நேற்று மியன்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டு 12 நிமிடங்களில், 6.4 ரிக்டர் அளவிலான மற்றொரு அதிர்வும் ஏற்பட்டது.

மியன்மார் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறுகின்ற நிலையில், அங்கு இணையங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனால், தற்போதைய நில அதிர்வு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, மியன்மாரில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.