தலைப்புச் செய்திகள்

முன்னாள் IGP தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை – வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) உத்தரவிட்டிருந்தது.

ஆனாலும், தேசபந்து தென்னகோனை பொலிஸார் மற்றும் சிஐடியினர் தேடி வருகின்ற போதும், அவரை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையினையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

தொடர்பான வீடியோ பதிவு