தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளை இன்று பொறுப்பேற்றார்

– அஷ்ரப் ஏ சமட் –

கிழக்கு மாகாணத்துக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, இன்று (16) கடமைகளை பெறுப்பேற்றார்.

மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் கந்தளாய் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட மாகாணத்தின் உயர்பொலிஸ் அதிகாரிகள் அடங்லாக சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது நடைபெற்ற பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை – புதிதாக நியமனம் பெற்றுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டார்.

புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர – விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக  கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.