
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் – நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில், இரு தரப்பினரதும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து சமரசம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு நாடாளுமன்ற உறுப்பினரும், அவரின் செயலாளர் சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை, அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் தர்க்கம் புரிந்தனர். இதனையடுத்து அவர்களில் ஒருவர் மீது அர்ச்சுனா எம்.பி தாக்குதல் நடத்தினார்.
இதன்போது காயமடைந்த நபர் – யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதேவேளை , காயமடைந்த நபரும் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து , யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் போது , இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும் முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி – சமரசமாக செல்வதற்கு உடன்பட்டனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்க்கப்பட்டுள்ளது.
இதையும் பாருங்கள்



