
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு குரங்குகள் காரணமாக அமைந்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்குகள் மோதியதால், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறியுள்ளார்.
இதனால், நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு – பின்னர் இந்த நிலைமையை “பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை” என்று விவரித்துள்ளது.
இன்று (09) நாடு முழுவதும் பிற்பகல் முதல் பல மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்கள்



