
மான நஷ்ட ஈடாக தனக்கு கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவப் போவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் சுஜீவ சேனசிங்கவை தொடர்புபடுத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க – தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசினார். இதனையடுத்து, அவருக்கு எதிராக – சுஜீவ சேனசிங்க கல்கிசை மாவட்ட நீதிமன்றில் மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்குமாறு, சி.பி. ரத்நாயக்கவுக்கு உத்தரவிட்டது.
இதேவேளை, பிணைமுறி மோசடியில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை சுஜீவ சேனசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“புற்றுநோய் வைத்தியசாலைக்கு 150 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கவும், பேராதெனிய வைத்தியசாலைக்கு 100 மில்லியன் ரூபாயை வழங்கவும் திட்டமிட்டுள்டுள்ளேன்” என்றார்.
“மேலதிகமாக அனாதை குழந்தைகளுக்கு உதவும் எனது தாயின் தொண்டு நிறுவனத்திற்கு பங்களிக்கவும் நான் விரும்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சி.பி. ரத்நாயக்க மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
தொடர்பான செய்தி: சுஜீவ சேனசிங்க எம்.பிக்கு 250 மில்லியன் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு
இதையும் பாருங்கள்



