தலைப்புச் செய்திகள்

‘ஜனநாயகத்துக்கு விரோதமானது’: அமைச்சரின் அறிவிப்பு தொடர்பில் மு.கா செயலாளர் நிஸாம் காரியப்பர் அறிக்கை

– கே.ஏ. ஹமீட் –

ள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ள நிலையில், ‘அரசாங்கத்துக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சாதகமாக தேர்தல் திகதியை தீர்மானிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது’ என, முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர் – அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு பெறப்படும் திகதியை அறிவிக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அவர்களுக்கு கீழ் இயங்கும் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்பொழுது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் விஷேட சட்ட மூலம் அமுல்படுத்தப்படும் காலத்திலிருந்து – மூன்று மாதத்துக்குள் உள்ள ஒரு திகதியாக தேர்தல் நடைபெறும் திகதி அமைய வேண்டும் வேண்டும்.

ஆகவே தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் அழைத்து கலைந்தாலோசித்த பின்னர்தான், தேர்தல் திகதி அறிவிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்துக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சாதகமாக தேர்தல் திகதியை தீர்மானிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாக நாங்கள் கருதுகிறோம் எனவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்கள்