
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத சொத்துக்களை குவித்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட – பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ‘வேலே சுதா’ எனும் சமந்த குமார, அவரின் மனைவி மற்றும் மற்றொரு பெண்ணை பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) அறிவித்து – அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 08 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெண்டிகே இந்த தீர்ப்பை இன்று வழங்கினார்.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்து – சட்டவிரோதமாக ஈட்டிய நிதி, சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு அபராதத்தினையும் விதித்தது.
போதைப்பொருள் கடத்தல்காரரான கம்போலா விதானகே சமந்த குமார அல்லது ‘வேலே சுதா’ தற்போது மரண தண்டனையை எதிர்பாத்துள்ளார். வருகிறார். 2015 ஆம் ஆண்டு இவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ஹெராயின் போதைப்பொருள் கடத்தலின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட 150 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் வீடுகளை வாங்கியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி: வெலே சுதாவுக்கு மரண தண்டனை



