
தென் மாகாண சபையின் பெயரில் – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயுள்ளன என்று, தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போயுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 200க்கும் மேற்பட்டவை என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 178 வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாகாண நிறுவனங்களால் வழங்கப்பட்ட பட்டியலில் உள்ளடங்கிய வாகனங்களை கண்டறிய முடியவில்லை என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நான்கு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பெயரில் பதிவு செய்யப்பட்ட 30 வாகனங்களுக்கு – இலவச வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமை, கணக்காய்வு விசாரணை அதிகாரிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.



