தலைப்புச் செய்திகள்

பழைய பொலிஸ் தலைமையகத்தில் 07 சிசிரிவி கமராக்களை காணவில்லை: கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கொழும்பு கோட்டையிலுள்ள பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சிசிடிவி கமராக்கள் காணாமல் போயுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், தற்போது கொம்பனித் தெருவில் பழைய விமானப்படை தளத்தில் இருந்து செயற்படும் பொலிஸ் தலைமையகம், கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

பழைய பொலிஸ் தலைமையக கட்டிடத்தின் 5வது மாடியில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் கமராக்கள் காணாமல் போனமைக்கான சரியான நேரம் தெளிவாகத் தெரியவில்லை, இருந்தபோதும், பொலிஸ் தலைமையகம் அதன் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் கமராக்கள் காணாமல் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காணாமல் போன கேமராக்களின் மொத்த மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் அவை எங்குள்ளது என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.