
கடுகண்ணாவையில் இன்று (21) நடந்த பஸ் விபத்தில் காயமடைந்த ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியை விட்டு பஸ் விலகி, மரத்தில் மோதியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியே, இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று (21) காலை ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் குறித்த விபத்தில் காயமடைந்த 30க்கும் அதிகமானோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.



