
நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் டிசம்பர் 13 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மொத்தம் 22,967 வீதி விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2,141 விபத்துக்கள் ஆபத்தான விபத்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது அனைத்து சம்பவங்களில் 9% ஆகும். மேலும், 6,500 கடுமையான விபத்துகளும், 9,127 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளன.
இது இவ்வாறிருக்க கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் விபத்துக்களைக் குறைக்கும் வகையில் பயணங்களின் போது அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



